2021 உத்தராகண்டம் பனிப்பாறை வெடிப்பு வெள்ளம்
2021ஆம் ஆண்டு உத்தராகண்ட மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம்2021 உத்தராகண்ட் பனிப்பாறை வெடிப்பு வெள்ளம், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் சிவாலிக் மலையின் பனிப்பாறைகள் 7 பிப்ரவரி 2021 அன்று உருகி விழுந்த காரணத்தால், தௌலிகங்கா ஆறு மற்றும் அலக்நந்தா ஆறுகளில் தீடீர் என வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சமோலி மாவட்டத்தில் உள்ள ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள இந்திய அரசின் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையம் அருகே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மின் நிலையத் தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இதில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது. 125 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 3 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Read article